கோப்புப்படம்  
கிரிக்கெட்

சூர்யகுமார் யாதவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை - இங்கிலாந்து முன்னாள் வீரர்

டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் விளையாடுவதை பார்ப்பது மிகவும் வேடிக்கையானதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் கூட அவரது செயல்பாடு திருப்திகரமானதாக இல்லை. இதனால் ரசிகர்கள் அவரை ஒருநாள் கிரிக்கெட்டில் எடுக்க வேண்டாம் என கூறிவருகின்றனர்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் வெறித்தனமாக விளையாடும் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தவிப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.

2024இல் டி20 கிரிக்கெட்டில் அசத்தப் போகும் வீரர் யார் என்று ஐசிசி இணையத்தில் பேசும் போது அவர் சூர்யாகுமார் பற்றி கூறியதாவது, இந்த உலகிலேயே டி20 கிரிக்கெட்டில் தற்போது பார்க்கப்பட வேண்டிய வீரர் சூர்யகுமார் யாதவ். டி20 கிரிக்கெட்டில் அவர் வெறித்தனமானவர். மிஸ்டர் 360 டிகிரி என்பதை தாண்டி அவர் விளையாடும் சில ஷாட்டுகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது.

இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு எப்போது அடிக்க வேண்டும், எப்போது அதிரடியாக அடிக்கக்கூடாது, என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஒவ்வொரு முறையும் அவர் அற்புதமாக விளையாடுகிறார். டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் விளையாடுவதை பார்ப்பது மிகவும் வேடிக்கையானதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்