கிரிக்கெட்

விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ் - எதில் தெரியுமா?

சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி ஒரு டி20 சர்வதேச தொடரை கூட இழந்ததிவில்லை.

Muthulingam Basker

சென்னை,

இந்தியா-நியூசிலாந்து இடையே நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீந்த்தியது.

கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வெறும் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது, இதில் அபிஷேக் சர்மா வெறும் 20 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். கேப்டனாக 50 வெற்றிகளுடன் ரோகித் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக 42 வெற்றிகளுடன் தோனி உள்ளார்.

32 வெற்றிகளுடன் 3-வது இடத்தில் விராட் கோலி இருந்தார். தற்போது 33 வெற்றிகளுடன் விராட் கோலியை சூர்யகுமார் யாதவ் முந்தியுள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி ஒரு டி20 சர்வதேச தொடரை கூட இழந்ததிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு