சென்னை,
நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த பெங்களூரு அணிக்கு, புவனேஷ்வர் குமார் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். தனது துல்லியமான 'அவுட்-ஸ்விங்கர்' பந்துகளால் மும்பை பேட்டர்களை நிலைகுலையச் செய்தார்.
பார்மில் இருந்த ரியான் ரிக்கல்டன், ரோகித் சர்மாவை அவுட் செய்து மும்பைக்கு அதிர்ச்சியை அளித்தார். தொடர்ந்து மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவை கோல்டன் டக் (0) ஆக்கினார். இதன் மூலம் பவர்-பிளேவிலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, மும்பை அணியின் முதுகெலும்பை உடைத்தார் புவனேஷ்வர்
இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், புவனேஷ்வர் குமார் ஐபிஎல் 2026 சீசனில் 20 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் நான்கு வெவ்வேறு சீசன்களில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 20+ விக்கெட்டுகள் எடுத்தவர்கள்:
யுஸ்வேந்திர சாஹல்: 5 சீசன்கள்
லசித் மலிங்கா: 4 சீசன்கள்
ஜஸ்பிரித் பும்ரா: 4 சீசன்கள்
புவனேஷ்வர் குமார்: 4 சீசன்கள் (2014, 2016, 2017 மற்றும் 2026)
லீக் போட்டிகள் முடிவுக்கு வரும் நிலையில், புவனேஷ்வர் குமாரின் பார்ம் பெங்களூரு அணிக்குப் பெரும் பலத்தை அளித்துள்ளது.