கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: சென்னை உள்பட 6 இடங்களில் நடக்கிறது

38 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.

தினத்தந்தி

மும்பை,

கலந்து கொள்ளும் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 5 எலைட் பிரிவிலும் தலா 6 அணிகள் இடம் பிடித்துள்ளன. தமிழக அணி பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. பிளேட் பிரிவில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. பிளேட் பிரிவின் லீக் ஆட்டங்கள் சென்னையில் நடக்கிறது. எலைட் பிரிவு லீக் ஆட்டங்கள் பெங்களூரு, கொல்கத்தா, வதோதரா, இந்தூர், மும்பை ஆகிய இடங்களில் நடக்கிறது. இதன் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் ஆமதாபாத்தில் ஜனவரி 20-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு லீக் சுற்றுக்கு முன்பாக 3 முறையும், நாக்-அவுட் சுற்றுக்கு முன்னதாக 2 முறையும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. ஜனவரி 2-ந் தேதிக்குள் போட்டி நடைபெறும் இடங்களுக்கு அனைத்து அணியினரும் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா பரவலுக்கு பிறகு நடைபெறும் முதலாவது உள்ளூர் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?