கிரிக்கெட்

பள்ளி அணிகளுக்கு இடையிலான மாநில 20 ஓவர் கிரிக்கெட்

பள்ளி அணிகளுக்கு இடையிலான, மாநில 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது.

தினத்தந்தி

நெல்லை,

பள்ளி அணிகளுக்கு இடையே மாநில அளவிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்று நெல்லை சங்கர்நகர் இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் சாந்தோம்-லிசாட்லியர் அணியும், பகல் 1 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஸ்ரீரங்கம்-கான்கோர்டியா அணியும் (ஏ மைதானம்) மோதுகின்றன.

பி மைதானத்தில் காலை 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் செயின்ட் பீட்ஸ்-பிளாட்டோஸ் அகாடமி அணியும், மதியம் 1 மணிக்கு நடைபெறும் போட்டியில் நீலாம்பால்-ஜெயேந்திரா அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நெல்லையில் நேற்று நடந்தது. இதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் சண்முகம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி விஸ்வநாதன் மற்றும் தட்சணாமூர்த்தி, ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை