கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்; 'இம்பேக்ட் பீல்டர்' விருதை வென்ற முகமது சிராஜ்..!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

தினத்தந்தி

ஜோகன்ஸ்பர்க்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடரை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

இந்த டி20 தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீரருக்கு 'இம்பேக்ட் பீல்டர்' என்ற விருதை பிசிசிஐ வழங்கியுள்ளது. அதன்படி இந்த 'இம்பேக்ட் பீல்டர்'விருதை முகமது சிராஜ் வென்றுள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்