Image Courtesy: @BCBtigers 
கிரிக்கெட்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்; வங்காளதேச அணி அறிவிப்பு

முதல் 3 டி20 போட்டிகளுக்கான வங்காளதேச அணியில் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெறவில்லை.

தினத்தந்தி

டாக்கா,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் மே 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடரில் முதல் 3 டி20 போட்டிகளுக்கான வங்காளதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் முதல் 3 டி20 போட்டிகளுக்கான வங்காளதேச அணியில் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெறவில்லை.

வங்காளதேச அணி விவரம்; நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), லிட்டன் குமர் தாஸ், தன்சித் ஹசன் தமீம், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்மூத் உல்லா, ஜாக்கர் அலி அனிக், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், பர்வேஸ் ஹசன் எமோன், தன்விர் இஸ்லாம், ஆபிப் ஹொசைன், சைபுதீன்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்