சென்னை,
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டி நடந்தது. அப்போது பானங்கள் இடைவேளையில் (Drinks Break) இரண்டரை முதல் மூன்று நிமிடங்கள் வரை லேசர் ஷோ நடத்தப்பட்டது.
இதற்காக ஐசிசி-ஐ இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார். போட்டியின் போது இதுபோன்ற விஷயங்கள் தேவையா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறுகையில், “பான இடைவேளையின்போது லேசர் ஷோ நடத்துவது பேட்ஸ்மேன்களுக்கும், மற்ற வீரர்களுக்கும் நல்லதல்ல. கண்கள் மீண்டும் வெளிச்சத்திற்குப் பழக சிறிது நேரம் எடுக்கும். உலகக் கோப்பை போன்ற முக்கிய போட்டிகளில் இதுபோன்ற விஷயங்கள் தேவையில்லை,” என்று கவாஸ்கர் கூறினார்.
மேலும், “ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் இதுபோன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கலாம். ஆனால் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போட்டிகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் அவசியமில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.