“பும்ரா இந்திய அணியின் துருப்புச் சீட்டு” - அபிஷேக் நாயர் புகழாரம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹெட்மையர் மற்றும் சேஸின் விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினார்.
“பும்ரா இந்திய அணியின் துருப்புச் சீட்டு” - அபிஷேக் நாயர் புகழாரம்
Published on

கொல்கத்தா,

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிப்பாதையில் முன்னேற முக்கிய காரணமாக இருந்தவர் பும்ரா என இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.

பும்ராவைப் பற்றி அபிஷேக் நாயர் கூறுகையில்,

“ஜஸ்பிரித் பும்ரா ஒரு ‘துருப்பு சீட்டு’. புதிய பந்தில், மத்திய ஓவர்களில் அல்லது டெத்தில் - எப்போது அவரை கொண்டுவந்தாலும் நம்மை ஏமாற்றமாட்டார். ஹெட்மெயர் விக்கெட் இந்தியாவை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. அந்த சூழ்நிலையில் ஹெட்மையர் மிகவும் ஆபத்தாக தோன்றினார். ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருந்தால், அப்படிப்பட்ட நேரத்தில் யார்க்கர் அல்லது பவுன்சர் போடவே நினைப்பார்கள்.

ஆனால் அந்த நிலையில் லெங்க்த் பந்து வீசி விக்கெட் எடுப்பது மிகவும் கடினமானது. அதன் பிறகு சேஸை அற்புதமான ஸ்லோ பந்தில் அவுட் செய்தார். அது வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கின் முதுகெலும்பை முறித்தது. இருவரும் செட் பேட்ஸ்மேன்கள். ஒரே ஓவரில் இரண்டு செட் பேட்ஸ்மேன்களை அவுட் செய்தால் எதிரணி மனஉறுதி சிதறும். பும்ரா எப்போதும் போலவே சிறப்பாக பந்து வீசினார்’ என்றார்.

Also Read
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் - முன்னணி வீராங்கனைகள் விலகல்...ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள்
“பும்ரா இந்திய அணியின் துருப்புச் சீட்டு” - அபிஷேக் நாயர் புகழாரம்

ஈடன் கார்டென் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், 12வது ஓவரில் ஷிம்ரோன் ஹெட்மையர் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராவின் ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 195/4 என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. பின்னர் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com