கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: சாம்பியன், ரன்னர்-அப் மற்றும் சூப்பர் 8 அணிகள் பரிசுத்தொகை விவரம்

இந்த தொடரில் பங்கேற்ற 20 அணிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

சென்னை,

டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டி இன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்த தொடருக்காக ஐசிசி மொத்தமாக ரூ.123 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இந்த தொகை போட்டியில் பங்கேற்ற 20 அணிகளுக்கிடையே அவர்களின் செயல்திறன் அடிப்படையில் பகிரப்படும்.

இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி உலக சாம்பியனாக மாறினால், இந்திய அணிக்கு சுமார் ரூ.27.48 கோடி பரிசுத்தொகை கிடைக்கும். அதே நேரத்தில் இந்தியா தோல்வியடைந்தால் சுமார் ரூ.14.65 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். இதே அளவு தொகை நியூசிலாந்து அணிக்கும் பொருந்தும்.

Also read:டி20 உலகக் கோப்பை - ’இந்தியாவின் கொண்டாட்டத்தை அந்த வீரர் கெடுப்பார்’ - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

இறுதிப்போட்டியில் இடம் பெறாத அணிகளுக்கும் ஐசிசி பரிசுத்தொகை வழங்குகிறது. அரையிறுதியில் தோல்வியடைந்த இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா சுமார் ரூ.7.24 கோடி பெறுகின்றன. புள்ளிப்பட்டியலில் 5 முதல் 8-ம் இடம் வரை உள்ள அணிகளுக்கு தலா சுமார் ரூ.3.48 கோடி, 9 முதல் 12-ம் இடம் வரை உள்ள அணிகளுக்கு தலா சுமார் ரூ.2.29 கோடியும் வழங்கப்படும். மேலும் 13 முதல் 20-ம் இடம் வரை உள்ள அணிகளுக்கும் தலா சுமார் ரூ.1.03 கோடி வழங்கப்படுகிறது.

லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்திய கேப்டன் சூர்யகுமார் கோப்பையை வென்று ரூ.21 கோடி பரிசுத்தொகையையும் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டாலோ அல்லது சூப்பர் ஓவர் நிலை ஏற்பட்டாலோ, ஐசிசி விதிமுறைகளின்படி வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டு இந்த பரிசுத்தொகை வழங்கப்படும்.