பாட்னா,
2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.இதில் இந்தியா வெற்றி பெற்று 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல இஷான் கிஷான் முக்கிய பங்காற்றினார்.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷனுக்கு வாழ்த்து தெரிவித்து ரூ.1 கோடி காசோலையை பரிசாக பீகார் முதல்-மந்திரி சம்ராட் சவுத்ரி வழங்கினார். பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் இஷான் கிஷான் என்பது குறிபிடத்தக்கது.