கிரிக்கெட்

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை வீரர் ஹசரங்கா புதிய சாதனை

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை வீரர் ஹசரங்கா புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

தினத்தந்தி

அபுதாபி,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனால் நடப்பு உலக கோப்பை தொடரில் அவரது விக்கெட் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இதன் மூலம் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஹசரங்கா படைத்தார். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்