கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: இத்தாலிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

புது டெல்லி,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்த தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் கொல்கத்தாவில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இங்கிலாந்து அணி தற்போதுவரை 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.