கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்வு

20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

துபாய்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதல் சுற்று மற்றும் சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் இன்று மோதுகின்றன.

இரு அணிகளும் 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், வில்லியம்சன் (கேப்டன்), கிளைன் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சவுதி, சோதி, டிரென்ட் பவுல்ட்.

ஆஸ்திரேலியா: வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்