கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: இலக்கை துரத்திப் பிடிப்பதில் புதிய சாதனை படைத்த இந்தியா

நேற்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

கொல்கத்தா,

டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக, கடந்த 2014 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சேசிங்கில் 171 ரன்கள் இலக்கை துரத்திப்பிடித்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. அத்துடன், 180க்கும் மேல் உள்ள இலக்கை இந்திய அணி விரட்டி பிடிக்காது என்ற எதிரணிகளின் எண்ணத்திற்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.