கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: இந்திய அணி புதிய சாதனை

2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடின.

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு, ஆட்டமிழந்தார். அவர் அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 5 ரன்கள் , ஹாரி புரூக் 7 ரன்கள் , பட்லர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். நிலைத்து ஆடிய பெத்தேல் சதமடித்து அசத்தினார். கடைசி வரை போராடிய அவர் 105 ரன்களில் (ரன் அவுட் ) ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 253 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் இந்தியா தரப்பில் 19 சிக்சர் அடிக்கப்பட்டன. டி20 உல க் கோப்பையில் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் சாத னையை இந்தியா சமன் செய்தது. ஏற்கனவே நெதர்லாந்து (2014-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக), வெஸ்ட் இண்டீஸ் (நடப்பு உலகக் கோப்பையில் ஜிம் பாப்வேக்கு எதிராக) அணிகள் தலா 19 சிக்சர் அடித்திருந்தது.