கொல்கத்தா,
10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 37வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - இத்தாலி அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இத்தாலி அணியின் கேப்டன் ஹாரி மனேன்டி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.