கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக நெதர்லாந்து பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்

சென்னை,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 21வது ஆட்டத்தில் அமெரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.