கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை : இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து

தொடர்ந்து மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது .

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சூப்பர்12 சுற்றில் நேரடியாக களம் காணும் அணிகள் போட்டிக்கு தயாராகும் பொருட்டு தலா 2 பயிற்சி ஆட்டங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது.

இதில் பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை பதம் பார்த்தது.

இந்த நிலையில் பிரிஸ்பேனில் இன்று  நடைபெறும் 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் பிரிஸ்பேனில் உள்ள கேபா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள்மோதுவதாக இருந்தது .இந்த நிலையில் தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது