கொழும்பு ,
20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 6-வது ஆட்டத்தில் இலங்கை-அயர்லாந்து அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 56 ரன்கள் எடுத்தார். கமிந்து மெண்டிஸ் 44 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 164 ரன்கள் இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பவுல் ஸ்டிர்லிங் 6 ரன்களில் அவுட் ஆன நிலையில், ராஸ் அடைர்-ஹாரி டெக்டர் ஜோடி சற்று நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
இதில் ராஸ் அடைர் 34 ரன்களிலும், ஹாரி டெக்டர் 40 ரன்களிலும் அவுட் ஆனதை தொடர்ந்து, இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இறுதியில் 19.5 ஓவர்களில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.