கிரிக்கெட்

டி-20 உலகக்கோப்பை ‘சூப்பர் 12’ சுற்று - தென் ஆப்பிரிக்கா அணி முதலாவதாக பேட்டிங்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ‘சூப்பர் 12’ ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அபுதாபி,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்குகிறது. சூப்பர்-12 சுற்றில் குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

சூப்பர்-12 சுற்றின் முதல் நாளான இன்று (சனிக்கிழமை) இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. தற்போது வரை தென் ஆப்பிரிக்க அணி 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வென்றதில்லை. அதே சமயம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் உலக கோப்பையில் அந்த அணி இறுதிப்போட்டிக்கு கூட வந்ததில்லை. இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் ஆஸ்திரேலியாவும், 8-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி கண்டுள்ளன.

இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), வார்னர், மிட்செல் மார்ஷ், கிளைன் மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), மார்க்ராம், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டுவெய்ன் பிரிடோரியஸ், கேஷவ் மகராஜ், ரபடா, அன்ரிச் நார்ட்ஜே, ஷம்சி.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு