சென்னை,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 21வது ஆட்டத்தில் அமெரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் அமெரிக்க அணியின் வீரர்கள் அதிரடி காட்டினர். சைதேஜா முகமலா , சுபம் ரஞ்சனே இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். சைதேஜா முகமலா அரைசதமடித்து அசத்தினார் அவர் 79 ரன்கள் எடுத்தார். சுபம் ரஞ்சனே 46 ரன்கள் எடுத்தார். இதனால் அமெரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணியில் பாஸ் டீ லீட் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 197 ரன்கள் இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாடியது.
அமெரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய நெதர்லாந்து அணி 15.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த 103 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றது.