கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: கனடா அணியை வீழ்த்தி நேபாளம் வெற்றி

நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் கனடா- நேபாளம் அணிகள் மோதின.

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இதில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் கனடா- நேபாளம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த கனடா 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய நேபாளம் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆசிப் ஷேக் 58 ரன்களும், சுந்தீப் ஜோரா 44 ரன்களும் எடுத்தனர். முன்னதாக முதலா வது பயிற்சி ஆட்டத்தில் நேபாளம் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்து இருந்தது.