மும்பை,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில லீக் போட்டிகளே மீதமுள்ளன. இதற்கிடையே, சூப்பர் 8 சுற்றுக்கு தற்போது வரை 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கும் இடம் பெற்றுள்ள அணிகள் விபரம்;
குரூப் ஏ: இந்த பிரிவில் தற்போது இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. அமெரிக்க அணிக்கு வாய்ப்பு இருந்தாலும், நமீபிய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால், பாகிஸ்தான் அணி குரூப் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
குரூப் பி: இலங்கை, ஜிம்பாப்வே
குரூப் சி: வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து
குரூப் டி: தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து