கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 10 ஓவர்களில் நியூசிலாந்து 57 ரன்கள் சேர்ப்பு

20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.

துபாய்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதல் சுற்று மற்றும் சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் இன்று பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்தில் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் களம் கண்டனர்.

தொடக்கவீரர் டேரில் மிட்செல் 8 பந்துகளில் 1 சிக்சருடன் 11 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 19 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

இதனால், பவர்-பிளே ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 32 ரன்கள் எடுத்தது.

மறுமுனையில், மற்றொரு தொடக்கவீரர் கப்தில் 33 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

நியூசிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்