கிரிக்கெட்

இந்தியாவின் வெற்றிகரமான டி20 கேப்டன்கள் யார்? - தோனி, கோலியை முந்திய 3 வீரர்கள்

எம்.எஸ். தோனி 72 போட்டிகள் விளையாடி 56.94 வெற்றி சதவீதம் வைத்துள்ளார்.

சென்னை,

இந்திய டி20 அணியின் கேப்டன்சியில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போதைய கேப்டனான சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள சூழலில், கேப்டன்சி மாற்றம் குறித்த தகவல்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன.

இந்த நிலையில், குறைந்தபட்சம் 10 டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய கேப்டன்களில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட முதல் 3 வீரர்களை பார்க்கலாம்.

3. ஹர்திக் பாண்டியா - 62.5 சதவீதம்

ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முழுநேர கேப்டனாக இல்லாவிட்டாலும், பல்வேறு தொடர்களில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். கேப்டனாக 16 போட்டிகள் விளையாடிய இவர் அதில் 10 வெற்றிகள் 5 தோல்விகளுடன் 62.5 வெற்றி சதவீதம் கொண்டுள்ளார்.

2. சூர்யகுமார் யாதவ் - 76.92 சதவீதம்

ரோகித் சர்மாவின் ஓய்வுக்கு பிறகு டி20 அணியின் பொறுப்பை ஏற்ற சூர்யகுமார் யாதவ், தனது தலைமையில் பல முக்கிய வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளார். கேப்டனாக 52 போட்டிகளில் 40 வெற்றிகள் 8 தோல்விகள் கண்டு 76.92 வெற்றி சதவீதம் கொண்டுள்ளார்.

1. ரோகித் சர்மா - 79.03 சதவீதம்

ரோகித் சர்மா இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட கேப்டனாக முதலிடத்தில் உள்ளார். கேப்டனாக 62 போட்டிகள் விளையாடி 49 வெற்றிகள் பெற்று 79.03 வெற்றி சதவீதம் வைத்துள்ளார்.

தோனி, கோலிக்கு இடமில்லை

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களாக கருதப்படும் தோனி, கோலிக்கு இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெறவில்லை.

எம்.எஸ். தோனி 72 போட்டிகள் விளையாடி 56.94 வெற்றி சதவீதம் வைத்துள்ளார். விராட் கோலி 50 போட்டிகள் விளையாடி 60 வெற்றி சதவீதம் வைத்துள்ளார்.