கிரிக்கெட்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு சென்னையில் நடந்தது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2017-18, 2018-19-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட உள்ளூர் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் கலந்து கொண்டார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் போட்டியில் சாம்பியன் பட்டம் மற்றும் 2-வது இடம் பிடித்த அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கி பாராட்டினார். விழாவில் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி, துணைத்தலைவர்கள் டாக்டர் பி.அசோக் சிகாமணி, சீனிவாச ராஜ், இணைசெயலாளர் கே.ஏ.சங்கர், பொருளாளர் பார்த்தசாரதி, உதவி செயலாளர் என்.வெங்கடராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 2017-18-ம் ஆண்டுக்கான ராஜா பாளையம்பட்டி கோப்பைக்கான முதல் டிவிசன் போட்டியில் குளோப் டிரோட்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தையும், கிராண்ட்ஸ்லாம் கிரிக்கெட் கிளப் 2-வது இடத்தையும் கைப்பற்றின. 2018-19-ம் ஆண்டுக்கான முதல் டிவிசன் போட்டியில் ஆழ்வார்பேட்டை கிரிக்கெட் கிளப் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் 2-வது இடம் பிடித்தது.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்