கிரிக்கெட்

ஐபிஎல் 2026 - ஸ்ரேயாஸ், சால்ட் இல்லை... சிறந்த கேட்ச் விருதை வென்றது யார் தெரியுமா?

தொடர் முழுவதும் பல அற்புதமான கேட்ச்கள் எடுக்கப்பட்டன.

அகமதாபாத்,

ஐபிஎல் 2026 தொடரின் 'கேட்ச் ஆப் தி சீசன்' விருதை மனீஷ் பாண்டே வென்றுள்ளார். தொடர் முழுவதும் பல அற்புதமான கேட்ச்கள் எடுக்கப்பட்டது. அதில், மனீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், பில் சால்ட் பிடித்த கேட்ச்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில், மனீஷ் பாண்டேவின் அபாரமான கேட்ச் இந்த சீசனின் சிறந்த கேட்ச்சாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டிம் டேவிட்டை வெளியேற்றிய அபார கேட்ச்

லீக் சுற்றில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் மனீஷ் பாண்டே, டிம் டேவிட் அடித்த பந்தை அசாத்தியமான முறையில் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார்.

அனுபவத்தை மீண்டும் நிரூபித்த மனீஷ் பாண்டே

ஐபிஎல் தொடரில் நீண்டகால அனுபவம் கொண்ட வீரரான மனீஷ் பாண்டே, தனது பீல்டிங் திறமை இன்னும் குறையவில்லை என்பதை இந்த கேட்ச் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்.

கடந்த மார்ச் 28-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கிய ஐபிஎல் (IPL) தொடர் மே 31-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. 31-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி 2 முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.