கிரிக்கெட்

தெண்டுல்கர் மகளின் பெயரில் போலி டுவிட்டர் அக்கவுண்ட் என்ஜினியர் கைது

தெண்டுல்கர் மகளின் பெயரில் போலி டுவிட்டர் அக்கவுண்ட் வைத்திருந்த எஞ்சினியர் கைது செய்யப்பட்டார்.

மும்பை

கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர். அவரின் பெயரில் போலி டுவிட்டர் அக்கவுண்ட் வைத்திருந்த என்ஜினியர் நிதின் சிசோடாய் (39) கைது செய்யப்பட்டார். அந்தேரி பகுதியில் வசித்து வந்த நிதின் இரண்டு நாட்களுக்கு முன்னரே கைது செய்யபட்டதாகவும் மேலும் அவர் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்க்கு எதிராக தீங்கு விளைவிக்கும் பதிவை வெளியிட்டதாகவும் போலீஸ் கமிஷ்னர் அக்பர் பதான் கூறினார்.

மேலும் போலீஸ் விசாரணையில் அவர் சில பாலிவுட் பிரபலங்களின் பெயரில் போலி டுவிட்டர் அக்கவுண்ட் வைத்திருந்தார் என்பதும் மேலும் அவர் இணையதளம் மூலம் பல மோசடியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. நிதின் சிசோடாய் வீட்டிலிருந்து லேப்டாப், 2 மொபைல் போன்களை கைப்பற்றினர். குற்றவாளியை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் முன்னர் நாளை வரை போலீஸ் விசாரணை நடைபெறும் எனவும் , போன வருடம் அக்டோபர் மாதம் சாரா டெண்டுகரின் போலி டுவிட்டர் அக்கவுண்ட்டில், சரத் பவார் மீது தரக்குறைவாக முறையில் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு