கிரிக்கெட்

உலக கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் தெண்டுல்கர் நடனமாடினார் - ஹர்பஜன்சிங் தகவல்

உலக கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் தெண்டுல்கர் நடனமாடியதாக ஹர்பஜன்சிங் ருசிகர தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. உலக கோப்பையை வென்ற பிறகு நடந்த கொண்டாட்டம் குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறுகையில், அன்று நான் சச்சின் தெண்டுல்கர் நடனமாடுவதை முதல் முறையாக பார்த்தேன்.

அவர் முதல் முறையாக தன்னை சுற்றி இருப்பவர்கள் யார்? என்பது பற்றி கவலைப்படாமல் எல்லோருடனும் இணைந்து ஆடி மகிழ்ச்சியை அனுபவித்தார். அதனை நான் எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன் என்றார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்