கிரிக்கெட்

இந்திய அணிக்கு தெண்டுல்கர், வார்னே பாராட்டு

லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் அட்டகாசமான வெற்றியை ருசித்த இந்திய அணியை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் அட்டகாசமான வெற்றியை ருசித்த இந்திய அணியை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த டெஸ்டில் ஒவ்வொரு தருணத்தையும் பார்த்து ரசித்தேன். கடினமான கட்டத்தில் இருந்து இந்தியா மீண்டு எழுந்ததும், மனஉறுதியும் என்னை பொறுத்தவரை தனித்து நிற்கிறது. மிக நன்றாக விளையாடியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, லார்ட்சில் என்ன ஒரு அருமையான டெஸ்ட். சிறந்த ஆடுகளம், சிறந்த கிரிக்கெட் மற்றும் இந்தியாவின் அபாரமான திறமையின் வெளிப்பாடு. இங்கு நினைவூட்டுகிறேன், இந்தியா டாஸ் இழந்தது, முதல் இன்னிங்சில் இங்கிலாந்துக்கு முன்னிலை கொடுத்தது. அத்துடன் கடைசி நாளில் ரிஷாப் பண்ட் அவுட் ஆனதும் இங்கிலாந்துக்கு தான் வெற்றி என்று ஒவ்வொருவரும் நினைத்தனர். ஆனால் போராடி எழுச்சி பெற்ற இந்தியா வெற்றிக்கு தகுதியான அணி என்றார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு