image courtesy;twitter/@ICC 
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் நிதான ஆட்டம்..!

ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 487 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

தினத்தந்தி

பெர்த்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 84 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் குவித்திருந்தது.

இதையடுத்து 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 487 குவித்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 164 ரன்களும், மிட்செல் மார்ஷ் 90 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் அடித்த நிலையில் அப்துல்லா ஷபீக் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் தனது பங்குக்கு 30 ரன்கள் அடித்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

2-வது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 53 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்து நிதானமாக ஆடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக் 38 ரன்களிலும், குர்ரம் ஷாஜாத் 7 ரன்களிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் மற்றும் லயன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.   

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்