வெலிங்டன்,
நியூசிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 84 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்தது. 3 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்து 6-வது சதத்தை நிறைவு செய்த ஹென்றி நிகோல்ஸ் 117 ரன்களுடன் (207 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் உள்ளார். பொறுப்பு கேப்டன் டாம் லாதம் 27 ரன்களும், வில் யங் 43 ரன்களும், டாரில் மிட்செல் 42 ரன்களும், ராஸ் டெய்லர் 9 ரன்னும் எடுத்து நடையை கட்டினர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் கேப்ரியல் 3 விக்கெட்டும், செமார் ஹோல்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.