image courtesy:ICC 
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா மாபெரும் சாதனை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

தினத்தந்தி

கொல்கத்தா,

இந்தியா- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன் இலக்கை கூட விரட்டிப் பிடிக்க முடியாமல் இந்திய அணி 93 ரன்னில் அடங்கி படுதோல்வி அடைந்தது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது.

டெஸ்டில் பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி தோற்றதில்லை என்ற பெருமை இந்த போட்டியிலும் தொடர்கிறது. அவரது கேப்டன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா 10-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது. இதன் மூலம் டெஸ்டில் தோல்வியே சந்திக்காமல் அதிவேகமாக 10 வெற்றிகளை தேடித்தந்த கேப்டன் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்