கல்லே,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று இலங்கை கிரிக்கெட் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. 24வது ஓவரில் அந்த அணியின் கேப்டன் கருணாரத்னே அடித்து ஆடினார்.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரரான ஜெரேமி சோலோஜனோவை நோக்கி பந்து சென்றது. அதனை பிடிப்பதற்கு முன் அவரது ஹெல்மெட்டை பந்து தாக்கி சென்றது. இதில் அவர் காயமடைந்து உள்ளார். இதனை தொடர்ந்து சோலோஜனோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.