Image Courtesy: @BCCI 
கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடர்: இம்பேக்ட் வீரர் விருதை வென்றது யார் தெரியுமா..?

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் முதல் போட்டி அகமதாபாத்திலும், 2வது போட்டி புதுடெல்லியிலும் நடைபெற்றது. இந்த இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் கவுன்சில் (பி.சி.சி.ஐ) ஒவ்வொரு இரு தரப்பு தொடரின் முடிவிலும் அந்த தொடரில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்திய வீரரை தேர்வு செய்து அவரது இம்பேக்ட் வீரர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அந்த தொடரின் இம்பேக்ட் வீரர் விருதை வென்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்