கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு

20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

தினத்தந்தி

அபுதாபி,

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி அபுதாபியில் இன்று நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி (123 புள்ளிகள்) இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால், 130 புள்ளிகளுடன் முதல்முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறும். மாறாக ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே பாகிஸ்தான் அணியால் (132 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்க முடியும். ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றால் இந்திய அணியை (124 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பிடிக்கும்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்