கிரிக்கெட்

பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளேவை நீக்க முடிவு

பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளேவை நீக்க முடிவு அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே ஐ.பி.எல். தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2020-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அதன் பிறகு நடந்த 3 சீசன்களிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. 2020, 2021, 2022-ம் ஆண்டுகளில் அந்த அணி 6-வது இடமே பிடித்தது.

அணியின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி அடைந்து இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்தினர், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளேவை நீக்க முடிவு செய்துள்ளனர். புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் வேட்டையில் இறங்கி இருக்கும் பஞ்சாப் அணி நிர்வாகம் விரைவில் புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன் கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வால் மொத்தம் 196 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். எனவே அவரது பதவியும் பறிபோகும் என்று தெரிகிறது. 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...