கிரிக்கெட்

ஆசிய கோப்பை ஆட்டங்களை கொழும்பில் இருந்து மாற்ற முடிவு...?

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் 5 ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதையடுத்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோத உள்ளன.

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தை பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியது. ஆனால் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் 5 ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் கொழும்பில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மோசமான வானிலை நிலவுவதால் இந்த ஆட்டங்களை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசித்து வருகிறது.

இதற்காக பல்லகெலே, தம்புல்லா, ஹம்பன்தோட்டா ஆகிய 3 இடங்கள் பரிசீலனையில் உள்ளது. எங்கு மாற்றம் செய்யப்படும் என்பது ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து