கிரிக்கெட்

இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது

இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது.

கேப்டவுன்,

இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் முதலாவது ஆட்டம் கேப்டவுனில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இயான் மோர்கன் தலைமையிலான உலக சாம்பியன் இங்கிலாந்து அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய உற்சாகத்துடன் களம் இறங்கும். அதேநேரத்தில் சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை பறிகொடுத்த குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி ஒருநாள் தொடரை வென்று ஆறுதல் தேட முயற்சிக்கும்.

பேட்ஸ்மேன் பாப் டுபிளிஸ்சிஸ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதும், வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா காயம் காரணமாக ஆடாததும் தென்ஆப்பிரிக்க அணிக்கு சற்று பின்னடைவாகும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு