Image Courtesy: @thehundred  
கிரிக்கெட்

தி ஹண்ட்ரட் லீக் கிரிக்கெட்: பர்மிங்காம் பீனிக்ஸ் அணியை வீழ்த்திய வெல்ஷ் பயர்

வெல்ஷ் பயர் தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 47 ரன் எடுத்தார்.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பர்மிங்காம் பீனிக்ஸ் - வெல்ஷ் பயர் அணிகள் மோதின.

இந்த மோதலில் முதலில் பேட்டிங் செய்த பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 100 பந்துகளில் 9 விக்கெட்டை இழந்து 138 ரன்கள் எடுத்தது. பர்மிங்காம் பீனிக்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 38 ரன் எடுத்தார். வெல்ஷ் பயர் தரப்பில் கிறிஸ் கீரின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெல்ஷ் பயர் அணி 89 பந்துகளில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 140 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெல்ஷ் பயர் தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 47 ரன் எடுத்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு