கிரிக்கெட்

‘உண்மையான அணி இனிதான் வருகிறது’ - இந்திய அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை

சவால்மிக்க உண்மையான அணி அடுத்த வாரத்தில் இந்தியா வருகை தர உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆஸ்திரேலிய மண்ணில் பல தடைகளை தாண்டி டெஸ்ட் தொடரை வென்றதால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். ஆனால் சவால்மிக்க உண்மையான அணி அடுத்த வாரத்தில் இந்தியா வருகை தர உள்ளது. உங்களது சொந்த மண்ணில் அவர்களை தோற்கடித்தாக வேண்டும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். அடுத்த இரு வாரங்களில் அதிகமாக கொண்டாடுவதை தவிர்த்து விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து