கிரிக்கெட்

கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல் - கிரிக்கெட் ஜாம்பவான் “டான் பிராட்மேன்”

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 110வது பிறந்தநாளான இன்று கூகுள் நிறுவனம் சார்பில் சிறப்பு டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. #DonBradman

தினத்தந்தி

கிரிக்கெட் உலகு வரலாற்றில் மிக முக்கியமானவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன். கிரிக்கெட்டின் பெரும் சாதனையாளரான டான் பிராட்மேனின் சாதனை இன்று வரைக் கூட யாராலும் நெருங்க முடியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் முதல் முதலில் ஒரே நாளில் 309 ரன்கள் அடித்த பெருமை பிராட்மேனையே சேரும்.

1928 ஆம் ஆண்டில் இவர் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய பிராட்மேன் ஏறக்குறைய 20 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றுள் இங்கிலாந்து அணியுடன் மட்டும் 37 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 6,996 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி பிரமிக்கவைக்கும் வகையில் 99.96 ஆக உள்ளது. இந்தச் சாதனையை இப்போதும் கூட அதாவது பிராட்மேனின் பேட்டிங் சராசரியை யாராலும் இன்னும் நெருங்கக் கூட முடியவில்லை

டான் பிராட்மேன் 29 சதங்களும், 13 அரைசதங்களும் அடித்துள்ளார். இந்திய அணி 1998-1999 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அந்தத் தொடரின் போது டான் பிராட்மன் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே ஆகிய இருவரையும் டான் பிராட்மனின் பிறந்தநாளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அப்போது பேசிய டான் பிராட்மேன், சச்சினின் ஆட்டத்தை பார்க்கும்போது அதில் என்னையே பார்ப்பது போல உள்ளது என்று கூறினார்.

கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் தன்னுடைய 93 ஆவது வயதில் 2001 ஆம் ஆண்டு காலமானார். அத்தகைய பெருமைக்குறிய வீரரின் 110-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை கூகுள் கெளரவிக்கும் வகையில் சிறப்பு டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு