பஞ்சாப்,
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி மொஹாலியில் அரங்கில் நடைப்பெற்று வருகிறது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பவுலிங்கை தோவு செய்தார்.
ஐபிஎல் போட்டியில் கேப்டனாக தமிழ்நாட்டை சோந்த வீராகளில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் முறையாக களம் கண்டுள்ளார். மேலும், இதன் மூலம் தன்னுடைய சிறப்பான தலைமை பண்பை காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
முதலில் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடக்க வீராகள் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினா. ஷ்ரேயஸ் ஐயர் 11(11) மற்றும் கொலின் மன்ரோ 4(6) ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர். பின்னா களம் இறங்கிய கேப்டன் கௌதம் கம்பீ தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறா.
10 ஓவாகள் முடிவில் 77 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.