Image Courtesy: AFP  
கிரிக்கெட்

இந்த இரு வீரர்களை டெஸ்ட் அணியின் திட்டங்களில் சேர்க்க வேண்டும் - தினேஷ் கார்த்திக்

ஒருநாள் அணியில் ரஜத் படிதாரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

தினத்தந்தி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் தொடர் அக்டோபர் 6 முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு பற்றி தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் டுவிட்டரில் கூறியதாவது:-

ஒருநாள் அணியில் ரஜத் படிதாரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்புக்கு மிகவும் தகுதியானவர். முகேஷ் குமாருக்கும் வாழ்த்துகள்.

தற்போது சர்பராஸ் கான், இந்திரஜித் பாபாவை டெஸ்ட் அணியின் திட்டங்களில் சேர்க்க வேண்டும். அபாரமாகப் பங்களிப்புகளை, திறமையான வீரர்களைத் (தேர்வுக்குழு) தவிர்க்கக் கூடாது. இருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்றார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை