கிரிக்கெட்

நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர், பும்ராவுக்கு அக்தர் பாராட்டு

நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஜஸ்பிரீத் பும்ராதான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் ஷோயப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், யுடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ஜஸ்பிரித் பும்ரா சாதுர்யமான ஒரு பவுலர். ஆடுகளத்தில் புற்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை விட காற்றின் வேகம் எப்படி இருக்கிறது, அது எந்த திசையில் வீசுகிறது என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்ப பவுலிங் செய்கிறார். அனேகமாக இந்த மாதிரி செயல்படும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவாகத் தான் இருப்பார்.

நான், வாசிம், வக்கார் காற்றின் திசை, வேகம் ஆகியவற்றைப் பயன்படுத்துவோம். எங்களுக்கு மெக்கானிக்ஸ், ஏரோ டைனமிக்ஸ் தெரியும். எந்த நேரத்தில் எவ்வளவு ஸ்விங் ஆகும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். பும்ராவுக்கும் இவையெல்லாம் தெரியும் என்றே நான் கருதுகிறேன். மற்ற வீச்சாளர்களுக்கு இது தெரியவில்லை என்றே நான் நினைக்கிறேன்.7 ஸ்டெப்தான் ஓடி வருகிறார் 5 விநாடிகளில் பேட்ஸ்மென்கள் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் பும்ரா. 5 விநாடிகளில் பேட்ஸ்மெனை எப்படி வீழ்த்துவது என்று முடிவு கட்டுகிறார் பும்ரா.

வழக்கத்துக்கு மாறான ஒரு பந்து வீச்சாளர், நல்ல குணம்படைத்தவர், உடற்தகுதி அனுமதித்தால் நீண்ட காலம் ஆடுவார். பும்ரா மிகவும் சூட்சமான பொறிகளை வைக்கிறார். அந்த இடத்தில் 60 பந்துகளை வீசச் சொன்னாலும் அந்த இடத்தில் பிட்ச் செய்வார் போல் தெரிகிறது. ஓவர் த விக்கெட்டில் வரும் போது கிரீசை நன்றாகப் பயன்படுத்துகிறார். சரியாக 4வது ஸ்டம்ப், 3வது ஸ்டம்பில் வீசுகிறார். துல்லியமாக வீசுகிறார் தூக்கத்திலிருந்து எழுப்பி வீசச் சொன்னால் கூட அதே இடத்தில் பந்தை பிட்ச் செய்வார் போல் தெரிகிறது என கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை