கோப்புப்படம்  
கிரிக்கெட்

சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 12-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினத்தந்தி

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வருகிற 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டால் சேப்பாக்கத்தில் தோனி விளையாடும் கடைசி போட்டியாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி