கிரிக்கெட்

திலக் வர்மா அதிரடி சதம்... குஜராத்துக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது.

ஆமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் 13 ரன்களிலும், டேனிஷ் மாலேவார் 2 ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். அடுத்து வந்த நமன் திர் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தொடர்ந்து வந்த திலக் வர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 101 ரன்களுடனும், ரூதர்போர்டு 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.