கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை அணியிடம் திருச்சி தோல்வி

சென்னையில் நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

தினத்தந்தி

டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராஜகோபால் 45 ரன்னும், அமித் சாத்விக் 42 ரன்னும் எடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய கோவை அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜூ 74 ரன்னும் (52 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), கவின் 11 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சாய் சுதர்சன் 57 ரன்னுடனும் (43 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் ஷாருக்கான் 18 ரன்னுடனும் (5 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு