சென்னை,
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை அணிக்கு இடையேயான 8வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று நடந்து வருகிறது.
இதில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய அந்த அணி 4வது ஓவர் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்தது. 4.2வது ஓவரில் அனிருத் ஆட்டமிழந்து விட்டார்.
அந்த அணி 8வது ஓவர் முடிவில் அரை சதம் கடந்திருந்தது. 9.5வது ஓவரில் அந்த அணியின் 2வது விக்கெட் வீழ்ந்தது. 13வது ஓவர் முடிவில் சூர்ய பிரகாஷ் ஆட்டமிழந்ததை அடுத்து 3வது விக்கெட்டும் சரிந்தது. அதனை அடுத்து 13.2வது ஓவரில் ஹரீஷ் வெளியேறினார். 4 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களை கோவை அணி எடுத்திருந்தது.
அதன்பின்பு 16.5வது ஓவரில் சதம் கடந்த நிலையில் அந்த அணியின் 5வது விக்கெட் வீழ்ந்தது. 18.2வது ஓவரில் 6வது விக்கெட் வீழ்ந்து கோவை அணி 116 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில், 19.2வது ஓவரில் முகமது ஆட்டமிழந்த நிலையில் 7வது விக்கெட்டும் சரிந்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு கோவை அணி 146 ரன்களை எடுத்துள்ளது.
இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.